Saturday, July 4, 2026 11:43 am
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்று தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை அமைத்திருக்கிறது.
இந்நிலையில்தான் பல நாட்களுக்குப் பின் தமிழக முதல்வர் விஜய் தவெக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் பனையூருக்கு இன்று மதியம் 3 மணியளவில் செல்லவிருக்கிறார். முதலமைச்சரான பின் அவர் அனைவர் அலுவலகத்திற்கு செல்லவில்லை என சொல்லப்படுகிறது.
சமீபத்தில் சி.ஆர் விஜயபாஸ்கர். எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்பட பலரும் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தனர். எனவே அவர்களை விஜய் அங்கு சந்திப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் புதிதாக இணைந்த முக்கிய தலைவர்களுக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்தும் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் பற்றியும் அவர் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது.
இதில், அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த சி.ஆர்.விஜயபாஸ்கர் ,எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு முக்கிய பதவிகள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

