Friday, October 30, 2026 5:32 pm
டோக்கியோவின் கின்சா பகுதியில், மிளகுத் ஸ்பிறே பயன்படுத்தி ஒருவரை காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில், சீன பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒசாகா மாகாணத்தின் சகாய் நகரில் வசிக்கும் 24 வயதான யே ஷெங்ஃபெங் என்பவரை, பெருநகர சுகிஜி பொலிஸ்நிலைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மே 25 ஆம் திகதி நண்பகல் வேளையில், கின்சா சிக்ஸ் வணிக வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள ஏடிஎம் பகுதியில், 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் மீது, கேப்சாய்சின் கலந்த மிளகுத் தெளிப்பானைப் பயன்படுத்தியதாக யே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவருக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கும் இடையே எந்தவிதமான அறிமுகமும் இல்லை என்று கருதப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின் போது, அந்த இடத்திற்கு அருகில் இருந்த சுமார் 30 பேர், தங்கள் கண்கள் மற்றும் தொண்டையில் எரிச்சல் அல்லது வலி ஏற்பட்டதாகப் புகார் தெரிவித்தனர்.

