Saturday, June 20, 2026 9:37 pm
பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் அமெரிக்கா-ஈரான் ஆகியவற்றுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் சுவிட்ஸர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் நடைபெறும் என்று பாகிஸ்தான் சனிக்கிழமை அறிவித்தது.
“இந்தப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா , ஈரான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், பாகிஸ்தான், கட்டார் மத்தியஸ்தர்களுடன் பங்கேற்பார்கள்,” என்று வெளியுறவு அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

