Sunday, June 28, 2026 7:49 pm
ஜப்பானின் பசிபிக் கடற்கரையோரம் சனிக்கிழமை இரண்டு புயல்கள் கடந்து சென்றதில், ஒருவர் உயிரிழந்ததாகவும், மூவர் காயமடைந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஹிகோஸ் ,மெக்கால் புயல்களும், பருவகால மழை முகப்பும் தென்மேற்கு, மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் கனமழையைக் கொண்டு வந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன, சாலைகள் சேதமடைந்தன, மேலும் விமான மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் தடைபட்டன.
வெள்ளிக்கிழமையன்று யமகுச்சி மாகாணத்தில் நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில், 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிர் அறிகுறியின்றி மீட்கப்பட்டார், மேலும் மூவர் காயமடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
கிழக்குப் பகுதியைக் கடந்து சென்ற பிறகு, சனிக்கிழமை முடிவில் இரு புயல்களும் வெப்பமண்டல காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களாக வலுவிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

