Friday, June 26, 2026 9:51 pm
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் அவருக்கு நெருக்கமான சிலருக்கு அரசு பதவிகளை ஒதுக்கி வருவது தொடர் கதையாகி வருகிறது. ஏற்கனவே விஜயின் ஆஸ்தான ஜோதிடரான ராதன் பண்டிட் முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால் இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்ததால் அந்த நியமனம் திரும்ப பெறப்பட்டது. அதேபோல் சினிமாவில் விஜயின் கால்ஷீட்டுக்களை கவனித்து வந்த அவரின் மேனேஜரான ஜெகதீஷ் பழனிச்சாமி சமீபத்தில் முதல்வரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையும் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், ஜனநாயகன் பட தயாரிப்பாளர் கே.வெங்கட நாரயணா தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். கேவிஎன் நிறுவனத்தின் உரிமையாளர் இவர். அமைச்சர் பதவிக்கு இணையானது இந்த டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி என சொல்லப்படுகிறது. தற்காலிக பதவி உருவாக்கப்பட்டு அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இவர் யஷ் நடித்துள்ள டாக்சிக் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் தயாரித்திருக்கிறார்.. அனேகமாக இதற்கும் பலரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுப்பேற்கும் திகதியிலிருந்து ஒராண்டு காலத்துக்கு இந்த நியமனம் அமுலில் இருக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் விஜய் தனக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்ந்து அரசு பதவி கொடுத்து வருவது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

