Tuesday, August 11, 2026 2:57 pm
வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவம் கடந்த 19ஆம் திகதி கொடியற்றத்துடன் ஆரம்பமாகி , மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. அந்நிலையில் 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
ஆடி அமாவாசை தினமான நாளை புதன்கிழமை தீர்த்த திருவிழா இடம்பெறவுள்ளது. தீர்த்த திருவிழாவிற்காக , மாவிட்டபுரத்தில் இருந்து காலை கீரிமலை நோக்கி புறப்படும் மாவை கந்தனுக்கு கீரிமலை கண்டகி தீர்த்த கடற்கரையில் தீர்த்த திருவிழா நடைபெறும்.
ஆடி அமாவாசை தினத்தில், தந்தையை இழந்தவர்கள் , பிதிர்கடன்களை நிறைவேற்றும் விசேட பூஜை வழிபாடுகளும் கண்டகி தீர்த்த கடற்கரையில் நடைபெறவுள்ளது. கண்டகி தீர்த்த கரையில் இருந்து மாவை கந்தன் மீண்டும் மாலை 06 மணிக்கு, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் நோக்கி மாட்டு வண்டியில் புறப்படும் நிகழ்வு நடைபெறும்

