Wednesday, August 5, 2026 6:09 am
பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், தனியார் வாகனப் போக்குவரத்தைக் குறைக்கவும், கொழும்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களை உள்ளடக்கிய புதிய ‘மெட்ரோ’ பஸ்சேவை செப்டம்பரில் தொடங்கப்பட உள்ளது.
மக்கும்புர, பேட்டை, ராஜகிரிய, பொரளை, மலாபே, கடவத்தை, பனதுறை ,கெஸ்பேவ உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் ஏழு வழித்தடங்களில் மெட்ரோ பஸ் சேவை இயக்கப்படும்.எளிதில் அடையாளம் காண்பதற்காக, இந்த வழித்தடங்களில் ‘CM’ குறியீடும் வண்ணச் சின்னங்களும் பயன்படுத்தப்படும்.
பஸ்களையும், சாரதிகளையும் இணைக்கும் ஒரு டிஜிட்டல் முறையையும் அதிகாரிகள் அறிமுகப்படுத்துவார்கள். இது, சேவைகள் திட்டமிடப்பட்ட நேரங்களில் இயங்க உதவும்.

