Thursday, August 6, 2026 5:53 pm
கொழும்பு உயர் நீதிமன்றம் விதித்த தனது மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையை இரத்து செய்யக் கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திரா தாக்கல் செய்த மேல்முறையீட்டின் விசாரணையை மேல்முறையீட்டு நீதிமன்றம் செப். 23-ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தெமட்டகொடவில் உள்ள ஒரு கடையில் இருந்து 2015-ஆம் ஆண்டு ஒரு இளம் ஊழியரைக் கடத்தி, சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து, தாக்கிய வழக்கில் பிரேமச்சந்திராவைக் குற்றவாளி எனக் கண்டறிந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதியிட்ட தீர்ப்பை இந்த மேல்முறையீடு எதிர்க்கிறது.
உயர் நீதிமன்றம் விதித்த மூன்றாண்டு சிறைத் தண்டனை ,20,000 ரூமா அபராதம் ஆகிய இரண்டையும் ரஇத்து செய்யுமாறு ஹிருனிகா பிரேமச்சந்திரா மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
மேல்முறையீட்டாளர் சார்பில் ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ஷவிந்திர பெர்னாண்டோ, எதிர்வாதி சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரா ஆகியோர் அளித்த வாதங்களைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள் பி. குமரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, செப்டம்பர் 23 ஆம் திகதிக்கு விசாரணை நிர்ணயிக்கப்பட்டது.

