Friday, October 16, 2026 4:08 pm
சிறிலிய சவியா அமைப்புக்கு தேசிய சேமிப்பு வங்கி ரூ. 10 மில்லியன் வழங்கியது தொடர்பான விசாரணையின் போது , சிராந்தி ராஜபக்ஷவின் மருத்துவ அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை (16) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் அனுப்பிய கடிதத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், அவரது மருத்துவ நிலை குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்ததாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கான தேவை குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். பொதரகம குறிப்பிட்டார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ், அறிக்கையை ஆய்வு செய்ய அவகாசம் கோரினார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் பிற்பகல் 2.45 மணி வரை விசாரணையை ஒத்திவைத்தது.

