Thursday, October 29, 2026 8:25 pm
இஸ்ரேலில் வேலை தேடும் இலங்கையர்கள், 2027-ஆம் ஆண்டு முதல் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் (government-to-government agreements) மூலமாக மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் என்று இஸ்ரேலிய அரசாங்கத்தின் புதிய கொள்கை தெரிவிக்கிறது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ,உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் வாயிலாக தற்போது நடைமுறையில் உள்ள ஆட்சேர்ப்பு முறை, 2026 டிசம்பர் 31-ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.
இந்தக் கொள்கையானது கட்டுமானம், தொழில் துறை, வணிகம் மற்றும் சேவைத் துறைகளை உள்ளடக்கியது. இருப்பினும், புதிய ஆட்சேர்ப்பு செயல்முறை, கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் மற்றும் தேர்வு நடைமுறைகள் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இஸ்ரேலில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி தனிநபர்களோ அல்லது முகவர் நிலையங்களோ அணுகினால், அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்றும், மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் வரை தனியார் நடத்தும் திறன் மதிப்பீடுகள் அல்லது நேர்காணல்களில் பங்கேற்க வேண்டாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வேலை தேடுபவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

