Monday, May 25, 2026 4:33 pm
அதிமுக எம்எல்ஏக்கள் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனை சந்தித்து இராஜினாமா கடிதத்தை அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் ஆவர். இதன் மூலம் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 44 ஆக உள்ளது. திருச்சி கிழக்குடன் சேர்த்து 4 தொகுதிகளுக்கு வரும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும்.
சட்டசபைத் தேர்தலில் வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுகவில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் போன்ற முக்கிய தலைவர்கள் தனி அணியாக செயல்படத் தொடங்கினர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பிளவு தமிழ்நாடு சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
விஜய்யின் அமைச்சரவையில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமானதால் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் எடப்பாடியுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தினர் இந்த நிலையில் இராஜினாமாச் செய்த மூன்று பேரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகத்திற்கு சென்று தவெகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

