Thursday, July 9, 2026 3:13 pm
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதங்கேணி பகுதியில் இராணுவ தேவைக்காக காணி சுவீகரிப்பு நடவடிக்கை இன்று இடம் பெறவிருந்த நிலையில் காணி உரிமையாளர் மற்றும் அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் எதிர்ப்பினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று (09) காலை காணி அளவீடு செய்வதற்காக காணி உரிமையாளர் மற்றும் அயல் காணி உரிமையாளர்களை சமூக மளிக்குமாறு பிரதேச செயலகம் அழைப்பு விடுத்திருந்தநிலையில் காணி உரிமையாளர், அயல் காணி உரிமையாளர்கள் என பலரும் வருகை தந்திருந்தனர்.
காணி சுவீகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன, பருத்தித் துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ் உட்பட பலரும் வருகைதந்திருந்தனர்.
காணி உரிமையாளர் நீண்ட நேரமாக காணியை இராணுவத்திற்கு விற்பனை செய்வதற்கான முயற்சியிலிருந்த போதும் காணி உரிமையாளர் காணி அளவீடு செய்ய முடியாதென்று நில அளவைத் திணைக்களத்துக்கு கடிதம் மூலம் அறிவித்தநிலையில் காணி அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது.

