Tuesday, April 21, 2026 6:48 pm
ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சரும், பிரபல நடிகையுமான ரோஜா, இயக்குநர் ஆர்.கே. செல்வமணி ஆகியோரின் மகள் அன்ஷு மாலிகா அமெரிக்காவின் புகழ்பெற்ற இண்டியானா பல்கலைக்கழகத்தில் (Indiana University) உயரிய விருதான ஹெர்மன் பி வெல்ஸ்' (Herman B Wells Award - 2026) விருதை வென்று சாதனை படைத்துள்ளார். அந்தப் பல்கலைக்கழகத்தில் மதிப்புமிக்கலுடி ஸ்கூல் ஆஃப் இன்ஃபர்மேட்டிக்ஸ், கம்ப்யூட்டிங் அண்ட் இன்ஜினியரிங்’ கல்லூரியில் அன்ஷு மாலிகா Computer Science பயின்று வருகிறார். இவர் படிப்பில் மட்டுமின்றி தொழில்நுட்பம் மற்றும் சமூக சேவையிலும் சிறந்து விளங்குகிறார்
இந்த ஹெர்மன் பி வெல்ஸ் விருதுக்கு முன்பாகவே, இவர் தனது துறைசார்ந்த திறமைக்காக Maureen Biggers Leadership Award for Equity and Technology Excellence (2025), Luddy Academic Excellence Award (2024-25), Global Entrepreneur Award (2024), Global Impact Advocate Award (2025) மற்றும் மதிப்புமிக்க கிரேஸ் ஹாப்பர் ஸ்காலர்ஷிப் (Grace Hopper Scholarship) உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.ஹெர்மன் பி வெல்ஸ்' விருது இண்டியானா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மிக உயரிய மற்றும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விருதுகளில் ஒன்றாகும். இண்டியானா பல்கலைக்கழகத்தின் 11-வது தலைவராகவும், பின்னர் அதன் வேந்தராகவும் இருந்து பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றியஹெர்மன் பி. வெல்ஸ்’ என்பவரின் நினைவாக 1961-ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இது எளிதில் கிடைத்துவிடும் விருது அல்ல. ஆண்டுதோறும் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களில், மிகச்சிறந்த தகுதிகள் கொண்ட ஒரே ஒரு மாணவருக்கு மட்டுமே மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இது இளங்கலை மாணவர்களுக்கான மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது.
இந்த விருதைப் பெறும் மாணவர்களின் பெயர் இண்டியானா பல்கலைக்கழகத்தின் `மெமோரியல் யூனியனில்’ நிரந்தரமாகப் பொறிக்கப்படும் என்பது இந்த விருதின் மற்றொரு மாபெரும் சிறப்பு.

