Monday, September 14, 2026 12:44 pm
ஜப்பானின் நகோயாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவின் பாதுகாப்பிற்காக சுமார் 10,000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தேசிய பொலிஸ் முகமை வியாழக்கிழமை தெரிவித்தது.
செப்டம்பர் 19 ஆஅம் திகதி நகரில் உள்ள ஒரு தடகள மைதானத்தில் நடைபெறவுள்ள ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில், பேரரசர் நருஹிட்டோ, பேரரசி மசாக்கோ உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள். பிரதமர் சனே டகாயிச்சி இந்த விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படவில்லை.
பணியில் ஈடுபடுத்தப்படும் 10,000 அதிகாரிகளில், சுமார் 3,100 பேர் நாடு தழுவிய பொலிஸ் படைகளிலிருந்து பிரத்யேகமாக அனுப்பப்படும் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சிறிய, ஆளில்லா விமானப் பயணங்கள் மீது கடுமையான விதிமுறைகளை விதித்த, சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், விழா நடைபெறும் இடம் மற்றும் அரச தம்பதியரின் தங்குமிடத்திலிருந்து சுமார் 1 கிலோமீற்றர் சுற்றளவில் உள்ள பகுதிகள் ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்படும். பேரரசர் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்வில் திருத்தப்பட்ட இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
1994-க்குப் பிறகு ஜப்பான் நடத்தும் இந்த விளையாட்டுப் போட்டியில் , வட கொரியா , ஈரான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. முக்கியமாக ஐச்சி மாகாணத்தில் நடைபெறும் இந்தப் போட்டிகள், அக்டோபர் 4 ஆம் திகதி வரை தொடரும்.
விளையாட்டு வீரர்கள், போட்டிகளின் போது நகோயா துறைமுகத்தில் உள்ள ஒரு சொகுசுக் கப்பலில் தங்குவார்கள். ஜப்பான் கடலோரக் காவல்படையுடன் ஒருங்கிணைந்து கண்காணிப்பை வலுப்படுத்த பொலிஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

