Tuesday, June 2, 2026 8:36 pm
அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கி, லொறி சாரதியாகப் பணிபுரிந்த த சுமார் 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (US Customs and Border Protection) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மே 11 முதல் 15 வரை அரிசோனா மாநிலத்தில் உள்ள யுமா பகுதியில் ‘ஆபரேஷன் செக்மேட்’ என்ற சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது 52 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 36 பேர் லொறி சாரதிகள். இவர்களில் 30 பேர் இந்தியர்கள். மீதமுள்ள ஆறு பேர் மெக்சிகோ, எல் சால்வடார் , ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கலிபோர்னியா, நியூயார்க், வாஷிங்டன் ,விர்ஜீனியா உள்ளிட்ட மாநிலங்களில் வணிக சாரதி உரிமம் (Commercial Driver’s License) பெற்றிருந்தனர். சிலரிடம் சாரதி உரிமமும் இல்லை. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வேலை அனுமதி ஆவணங்களை (Employment Authorization Documents) வைத்திருந்தனர். ஆனால் அந்த ஆவணங்கள் முந்தைய நிர்வாக காலத்தில் வழங்கப்பட்டவை என்றும் தற்போது அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துவிட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

