Monday, June 1, 2026 10:56 am
ஹட்டன் நகரில் உள்ள கோழிச் சந்தைகளில் வீசப்பட்ட கோழிக்கழிவுகளை ஒரு சிறிய லொறி ஒன்றில் ஏற்றிச் சென்று , மகாவலி ஆற்றில் கலக்கும் ஹட்டன் ஓயா ஆற்றில் கொட்டியதற்காக , ஹட்டன் பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரிகளால் (29) ஆம் திகதி இரவு இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
அந்த இரு சந்தேக நபர்களும் கோழிக்கழிவுகளை லொறியில் ஏற்றி ஹட்டன் – கொழும்பு பழைய வீதி வழியாக இரு முக்கிய நீரோடைகளின் சங்கமமாகும் மகாவலி ஆற்றின் தொடக்கமாக அமைகிறது இதன்படி இவர்கள் ஹட்டன் ஓயா ஆற்றில் கொட்டவிருந்தபோது , இரவு ரேந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் அவர்களைக் பின்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அந்த இரு சந்தேக நபர்களையும் லொறியையும் கைது செய்துள்ளனர்.
சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என்று அப்பகுதி பொதுமக்கள் குறை கூறி வந்தன் காரணமாக பொலிஸார் இவ்வாறு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

