Monday, May 11, 2026 10:42 am
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ்தேவி ரயில் சேவை இன்று திங்கட்கிழமை (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் யாழ்தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கவுள்ளதுடன் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்தேவி ரயிலானது குளிரூட்டப்பட்ட 4 முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்டதுடன், அதில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

