Thursday, April 23, 2026 4:26 pm
உலக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சர்வதேச ‘அமைதிக்கான பாதயாத்திரை’ நிகழ்ச்சியின் இன்றைய பயணத்தின் போது ஒரு உன்னத மனிதாபிமானச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வணக்கத்திற்குரிய பன்ஞ்ஞாக்கார தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் இன்று வரலாற்றுப் புகழ்மிக்க மாத்தளை அலுவிஹாரையிலிருந்து கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை நோக்கித் தமது பாதயாத்திரை ஊர்வலத்தை ஆரம்பித்தனர்.
இதன்போது பாதையோரத்தில் ஒரு தம்பதியினர் தமது பச்சிளம் குழந்தையை துணியொன்றில் கிடத்தி வீதியோரம் வைத்திருந்தனர்.
பன்ஞ்ஞாக்கார தேரர் மக்கள் கூட்டத்தைக் கடந்து சென்ற வேளையில் வீதியோரம் கிடத்தப்பட்டிருந்த அந்த குழந்தையை ஆசீர்வதித்தார். ஆசீர்வாதங்களை அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல் அக்குழந்தையைச் செல்லமாகக் கொஞ்சித் தனது அன்பை வெளிப்படுத்தினார்.

அவர் காட்டிய இந்தக் கருணை அங்கு நின்றிருந்த மக்களைப் பிரமிக்க வைத்தது. தமது குழந்தைக்குத் தேரரின் ஆசீர்வாதம் கிடைத்ததை எண்ணி அந்தப் பெற்றோர் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.


