Tuesday, May 19, 2026 10:16 am
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு , தேசிய பாதுகாப்பு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை கிடைக்கவில்லை என அவரது சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். இந்த நினைவுத் தின நிகழ்வில் மகிந்தவை தவிர்ப்பதற்கான தீர்மானம் தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உபாலி பன்னிலகே வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்தையும் மனோஜ் கமகே இதன்போது மறுத்துள்ளார்.
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் நடத்தப்படவுள்ள இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கான எந்தவொரு அழைப்பிதழும் முன்னாள் ஜனாதிபதிக்கு இதுவரை கிடைக்கவில்லை” என சட்டத்தரணி மனோஜ் கமகே , குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் , பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என அமைச்சர் உபாலி பன்னிலகேவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

