Wednesday, September 9, 2026 12:59 pm
இந்தியாவில் சென்னை, புனே, பெங்களூர், லக்னோ, மும்பை, ஹைதராபாத் போன்ற முக்கிய பெரிய நகரங்களில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனங்கள் பிராஜெக்டகளுக்கு அமெரிக்காவை நம்பியிருக்கின்றன. இந்தியாவில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனங்கள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தே பிராஜெக்டுகளை வாங்குவதாக சொல்லப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை பொறுப்பேற்றவுடன் மற்ற நாடுகளிலிருந்து பலரும் அமெரிக்காவில் தங்கி வேலை பார்ப்பதால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறி நிறைய கெடுபிடிகளை கொண்டு வந்தார். ஏற்கனவே H1B1 விஸாவுக்கான கட்டணத்தை கிட்டத்தட்ட ஒரு கோடி அளவு அவர் உயர்த்தி விட்டார்.
இந்நிலையில்தான் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிரீன் கார்ட் வழங்க PERM சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க COGNIZANT நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு இடைக்கால தடை விதித்திருக்கிறது. விஸா மோசடி புகார் குறித்து விசாரணை நடப்பதால் இந்த நடவடிக்கை என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், அமெரிக்க ஊழியர்களை பாதிக்கும் வகையில் Cognizant நிறுவனம் குறைந்த ஊதிய பிரிவில் விஸா தாக்கல் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

