Wednesday, July 22, 2026 1:10 pm
நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சிக்கு அருகே பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பலத்த காயமடைந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.
நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியின் மோஹினி நீர்வீழ்ச்சிக்கு அருகில் இன்று (22) இடம்பெற்ற இவ்விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த மூன்று மாணவர்கள் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதிவேகமாகப் பயணிக்கப்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நல்லதன்னி பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
விபத்தில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநரும், அதில் பயணித்த முதியவர் ஒருவருமே உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த சமயத்தில் முச்சக்கர வண்டியில் மொத்தம் 5 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

