Tuesday, July 14, 2026 10:34 am
காலிறுதி வரை சென்று வரலாறு படைத்த நோர்வே அணிக்கு ஏராளமான இரசிகர்கள் சேர்ந்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
உலகக் கிண்ணக் கால்பந்து வரலாற்றில் முதன்முறையாகக் கால் இறுதி வரை முன்னேறிப் சாதனை படைத்த நோர்வே தேசிய கால்பந்து அணியினருக்கு நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் சுமார் 90000 இரசிகர்கள் ஒன்றுகூடி பிரம்மாண்ட வரவேற்பளித்துள்ளனர்.
பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் ஆர்ஜெண்டினா ஆகிய நாடுகள் அரையிறுதிச் சுற்றில் மோதவுள்ள நிலையில் இத்தொடரில் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதி வரை தகுதிபெற்று வெளியேறிய நோர்வே அணிக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.


