Saturday, November 21, 2026 1:04 pm
‘என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?’: என பிரியாவிடை உரையின்போது அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தனது துணைக்கு வேண்டுகோள் விடுத்து அதிர்ச்சியளித்தார் எம்.பியான ஜோர்டான் லேன்,
சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் (Nஸ்ந்) பாராளுமன்றத்தில் தனது பிரியாவிடை உரையின் போது, நீண்டகாலமாகத் தன்னுடன் இருந்த துணையைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டு, அந்த நிகழ்வை ஒரு மறக்க முடியாத தருணமாக மாற்றினார். ரைடு (Ryde) தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்டான் லேன். ஒரு முழங்காலில் அமர்ந்து, தனது துணையான நதாலியிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டு அங்கிருந்த சக பாராளுமன்ற உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
‘7NEWS’ செய்தி நிறுவனத்தின் தகவல்படி, நவம்பர் 19, ஆம் திகதி வியாழக்கிழமை அன்று, சட்டமன்றத்தில் லேன் தனது பிரியாவிடை உரையை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக இருந்து வருகின்றனர்.
தனது பிரியாவிடை உரையை நிகழ்த்திக்கொண்டிருந்த லேன், திடீரென ஒரு நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்து, பொது மக்கள் அமரும் பகுதியில் (public gallery) நிகழ்வுகளைக் கவனித்துக்கொண்டிருந்த நதாலியைப் பார்த்து, “சபாநாயகர் அவர்களே, ரைடு தொகுதியின் உறுப்பினராக எனது கடைசி கேள்வி, என் அன்புக்குரிய நதாலியிடம், நீ என்னை திருமணம் செய்துகொள்கிறாயா?” என்று கேட்டார்.
அவர் தனது துணையின் விரலில் மோதிரத்தை அணிவித்தபோது, பாராளுமன்ற அவையே கைதட்டல்களாலும் ஆரவாரத்தாலும் நிறைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக்கொண்டனர்.

