Saturday, November 21, 2026 12:48 pm
மன்னார், காலி கோட்டை , தம்புள்ளை பதுளை , அம்பாந்தோட்டை , நுவரெலியா, குருணாகல் ஆகியபகுதிகளில் காற்றின் தரம், ஆரோக்கியமற்றிருப்பதாக சனிக்கிழமை (21) வெளியான தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) ‘AirSL’ கண்காணிப்புத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரக் குறியீடு (AQI) மன்னாரில் 153 ஆகவும், காலி கோட்டையில் 151 ஆகவும், தம்புள்ளையில் 135 ஆகவும், பதுளையில் 120 ஆகவும், அம்பாந்தோட்டையில் 128 ஆகவும், நுவரெலியாவில் 113 ஆகவும், குருணாகலில் 115 ஆகவும் பதிவாகியுள்ளது.
சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள், காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் வேளைகளில், நீண்ட நேரம் வெளியில் இருப்பதையோ அல்லது கடினமான உடல் உழைப்புடன் கூடிய வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதையோ குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

