Saturday, November 21, 2026 12:03 pm
லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வுநிலையம் அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலையில்அதிகாலை 3:25 மணியளவில், கலிபோர்னியாவின் காமர்ஸ் நகருக்கு அருகில், சுமார் 10.5 மைல் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்ததாக யு.எஸ்.ஜி.எஸ் (USGS) தெரிவித்தது. சேதம் குறித்தோ அல்லது சுனாமி எச்சரிக்கைகள் குறித்தோ உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை, ஆனால் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியின் பெரும் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான உடனடி எதிர்வினைகள் தெரிவிக்கின்றன.

