Friday, November 13, 2026 10:56 pm
உலகெங்கிலும் உள்ள பயனர்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுக்குப் பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ள தனது சில அமைப்புகளின் செயலிழப்பைச் சரிசெய்ய மைக்ரோசொப்ட் நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வியாழன் மாலை முதல் வெள்ளிக்கிழமை வரை மில்லியன் கணக்கான பயனர்களைப் பாதித்த உலகளாவிய செயலிழப்பிற்குப் பிறகு, சேவைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் கண்டு வருவதாக அந்தத் தொழில்நுட்ப நிறுவனம் தனது சமீபத்திய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினை சீரற்றதாகத் தெரிகிறது; எல்லா பயனர்களும் அல்ல, சில பயனர்கள் மட்டுமே Microsoft Teams மற்றும் Outlook மின்னஞ்சல் உள்ளிட்ட சேவைகளில் சிக்கல்களைப் புகாரளிக்கின்றனர்.
“ஐரோப்பாவில் மீட்புப் பணிகள் ஊக்கமளிப்பதாக முன்னேறி வருவதைக் காண்கிறோம். பாதிக்கப்பட்ட மைக்ரோசாப்ட் 365 உள்கட்டமைப்பின் பெருகிவரும் பகுதிகளில் சேவை கிடைப்புத்தன்மையும் மின்னஞ்சல் விநியோகச் செயல்திறனும் மேம்பட்டு வருகின்றன” என மைக்ரோசொப்ட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசொப்ட் செயலிழப்பு இங்கிலாந்து மருத்துவமனைகள், பொது மருத்துவர்கள், பாடசாலைகள் , பொலிஸ் ஆகியவற்றைப் பாதித்துள்ளது.

