Monday, November 9, 2026 2:29 pm
கிரீஸின் கிரீட் தீவின் தெற்கே , புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற மொராக்கோ கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றிலிருந்து திங்கள்கிழமை அதிகாலையில் 12 உடல்களை கிரேக்க அதிகாரிகள் மீட்டதுடன் 18 பேரை மீட்டதாக கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த 12 பேரின் அடையாளங்கள் அல்லது அவர்களின் மரணத்திற்கான சூழ்நிலைகள் குறித்து உடனடியாக மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் சென்ற , தெற்கு மத்திய தரைக்கடல் தீவான கிரீட்டிற்கு தெற்கே சுமார் 15 கடல் மைல் — அதாவது சுமார் 28 கிலோமீற்றர் அல்லது 18 மைல் — தொலைவில் திங்கள்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டதாக கிரீஸின் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
கிரீட் தீவின் தெற்கே, ஒன்றில் சுமார் 47 பேரும், மற்றொன்றில் சுமார் 40 பேரும் என மேலும் இரண்டு படகுகள் சென்றதும் கண்டறியப்பட்டது. முதலாவது படகை ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை முகமையான ஃபிரான்டெக்ஸின் விமானம் கண்டறிந்தது , இரண்டாவது படகை ஃபிரான்டெக்ஸின் ட்ரோன் ஒன்று கண்டுபிடித்ததாக கடலோரக் காவல்படை தெரிவித்தது.
இரு படகுகளிலும் இருந்தவர்கள் ஃபிரான்டெக்ஸ் அமைப்பினரால் மீட்கப்பட்டு, கிரீட்டின் தெற்குக் கடற்கரையில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், துருக்கியிலிருந்து லெஸ்போஸ் , சாமோஸ் தீவுகளுக்குப் பயணம் செய்த இரண்டு படகுகள் கவிழ்ந்ததில், பச்சிளம் குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்தனர் .
27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோருக்கான மிகவும் பரபரப்பான பாதை கிழக்கு மத்தியதரைக் கடல் என்று அக்டோபரில் ஃபிரான்டெக்ஸ் கூறியது; இருப்பினும், இந்த ஆண்டு இதுவரை அந்த கூட்டமைப்பிற்குள் நடக்கும் சட்டவிரோத எல்லைக் கடப்புகள் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளன.
2026-ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சுமார் 31,800 கடப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 15% சரிவு என்றும் அந்த முகமை தெரிவித்தது. கிழக்கு ஏஜியன் தீவுகள் மற்றும் துருக்கியுடனான தரைவழி எல்லையை விட, லிபியாவிலிருந்து கிரீட் வரையிலான வழித்தடமே இந்த பாதையில் மிகவும் பரபரப்பான பகுதியாக இருந்தது.

