Saturday, November 7, 2026 3:37 pm
இலங்கையில் மனிதவளத் தொழிலாளர் முறையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்டத்தை அரசாங்கம் தயாரித்து வருவதாக, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று சனிக்கிழமை(7) நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்காக இடைத்தரகர்களுக்குப் பணம் செலுத்த வேண்டிய நடைமுறையை அரசாங்கம் ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
மனிதவளத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் பலப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

