Thursday, October 29, 2026 8:36 pm
அச்சிடுவதற்கான அட்டைகள் ,இயந்திரங்களின் பற்றாக்குறை காரணமாக, 6.5 மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் இன்னும் அச்சிடப்படாமல் உள்ளன. இதனால், விண்ணப்பதாரர்கள் பலருக்கு தற்காலிக அனுமதிப்பத்திரங்களை வழங்க வேண்டிய கட்டாயம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவிக்கையில், நவம்பர் மாத நடுப்பகுதிக்குள் சில புதிய அச்சு இயந்திரங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார். இந்த புதிய இயந்திரங்கள் மூலம், திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் திறன் இருமடங்காகும் என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமளவில், வழமையான முறையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் பணிகளை மீண்டும் முழுமையாகத் தொடங்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அச்சிடும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள தேக்கநிலையைச் சரிசெய்ய திணைக்களம் முயற்சி செய்து வரும் நிலையில், விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து தாமதங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

