Thursday, October 22, 2026 5:14 pm
48cc அல்லது 50cc-க்கும் குறைவான எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்வது கட்டாயமாகும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் துஷார பெர்னாண்டோ இன்று வியாழக்கிழமை (22) தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், இத்தகைய மோட்டார் சைக்கிள்களுக்குப் பதிவு தேவையில்லை என்று சில விற்பனையாளர்கள் கூறி வருவதாகக் குறிப்பிட்டார். இத்தகைய மோட்டார் சைக்கிள்களை வாங்கும் போது, அதற்கான முறையான சுங்க ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதை நுகர்வோர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களைப் பொதுச் சாலைகளில் ஓட்டிச் சென்றால், பொலிஸாரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் மற்றும் அபராதங்கள் விதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

