Saturday, October 10, 2026 5:43 pm
சவூதி அரேபியாவில் உள்ள சிவில் விமான நிலையங்களை இலக்கு வைத்து அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களை இலங்கை கண்டித்துள்ளது;
வெளியுறவுத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுவெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சவூதிஅரேபிய அரசாங்கத்துடனும் மக்களுடனும் தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திய இலங்கை, பதற்றத்தைத் தணிக்க அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

