Monday, October 5, 2026 8:42 am
பல்வேறு முக்கிய துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக்களை மாற்றியமைத்து, மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மக்களவை தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் திமுக எம்பிக்களான திருச்சி சிவா , கனிமொழி ஆகியோர் மீண்டும் நிலைக்குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி சிவா தொழில் துறை சார்ந்த குழுவின் தலைவராகவும், கனிமொழி உணவு, நுகர்வோர் விவகாரங்கள். பொது விநியோகத்துறை சார்ந்த குழுவின் தலைவராகவும் தொடர்ந்து செயல்படுவர்.
அதேவேளையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தான் வகித்து வந்த இரு குழுக்களின் தலைமைப் பொறுப்பை இழந்துள்ளது. வர்த்தகத் துறை குழுவின் தலைவராக இருந்த திரிணமூல் காங்கிரஸின் டோலா சென்னுக்குப் பதிலாக பாஜகவின் சுதான்ஷு திரிவேதியும், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை குழுவுக்கு ககோலி கோஷ் தஸ்திதாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் எம்பிக்கள் சசி தரூர் (வெளியுறவு விவகாரங்கள்), சரண்ஜித் சிங் சன்னி (வேளாண்மை) ,ம் சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் வர்மா (சுகாதாரம்) ஆகியோர் தலைவர்களாகத் தக்கவைக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் அனுராக் தாக்கூர் (நிலக்கரி மற்றும் சுரங்கம்) , ராதா மோகன் சிங் (பாதுகாப்பு) ஆகியோரும் குழுத் தலைவர்களாகத் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

