Saturday, September 19, 2026 9:22 pm
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பாக ‘நீல அறிவிப்பு’ வெளியிடுமாறு குற்றப் புலனாய்வுத் துறை [CID] இன்ரபோலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்குச் சொந்தமான நிதிகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணை உட்பட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பான கோரிக்கை இதுவாகும்.

