Monday, September 14, 2026 1:22 pm
மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்த்து விளையாடிய இந்திய அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தானை சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான மோசின் நக்வியிடமிருந்து வெற்றிக் கிண்ணத்தைப் பெற மறுத்தனர் இந்திய வீராங்கனைகள்.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மகளிர் ஆசிய கோப்பை தொடருக்கான இறுதிப் போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. ரி20 பார்மெட்டில் இந்த தொடர் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்கள் சேர்த்தது. முதல் விக்கெட்டுக்கு ஷெபாலி வர்மாவும், ஸ்மிருதி மந்தனாவும் 129 ஓட்டங் கள் சேர்த்தனர். அது இந்திய அணிக்கு சிறந்த தொடக்கமாக அமைந்தது. ஷெபாலி, 39 பந்துகளில் 68 , ஸ்மிருதி, 39 பந்துகளில் 59 , , கப்டன் ஹர்மன்பிரீத் 14, ரிச்சா கோஷ் 17, தீப்தி சர்மா 5, கமலினி 15, பார்தி 2 ஓட்டங்கள் எடுத்தனர்.
184 ரஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை அணி விரட்டியது. அந்த அணி 20 ஓவர்களில் சகல விக்கெற்களையுமிழந்து 111 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா 72 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. ஆசிய கிண்ணத்தை 8-வது முறையாக இந்திய கிரிக்கெட் அணி
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரில் இந்திய ஆடவர் அணி சம்பியன் பட்டம் வென்றது. அப்போதும் இதே காரணத்தால் இந்திய அணிக்கு வெற்றிக் கிண்ணத்தை வாங்கவில்லை.

