Sunday, September 13, 2026 3:37 pm
லீ மேன்ஸ் கிண்ண கார் பந்தய தொடரின் ஐந்தாவது சுற்றான சில்வர்ஸ்டோன் சுற்றில் ஒட்டுமொத்தமாக 38-வது இடத்தில் நிறைவு செய்தது அஜித் குமாரின் குழு. முன்னதாக, இந்த பந்தயத்தை முதல்வர் விஜய், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நடிகரும், ரேஸருமான அஜித் குமார் பங்கேற்றார்.
இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்வதேச பந்தய சர்க்யூட்டில் இந்த சுற்று நடைபெற்றது. ஸ்பெய்ன், பிரான்ஸ் (2 சர்க்யூட்), பெல்ஜியம் ஆகிய நாடுகளில் லீ மேன்ஸ் கிண்ண கார் பந்தய தொடரின் முதல் நான்கு சுற்றுகள் நிறைவடைந்தன. இந்நிலையில், இந்த தொடரின் ஐந்தாம் சுற்று இங்கிலாந்தில் நடைபெற்றது.
இந்த ஐந்தாவது சுற்றில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓட்டுநர் ரோமைன் வோஸ்னைக் உடன் இணைந்து அஜித் குமார் பங்கேற்றார். எல்.எம்.பி3 புரோ/ஏஎம் கேட்டகிரியில் அவர்கள் இதில் பங்கேற்றனர். அஜித் RedAnt by விராஜ் என் பெயரில் அஜித் குமாரின் குழு இந்த பந்தய தொடரில் பங்கேற்றுள்ளது.
சுமார் இரண்டு மணி நேரம் கொண்ட இந்த சுற்றுக்கான பிரதான பந்தயத்தில் ஒட்டுமொத்தமாக ANS Motorsport அணி முதலிடம் பிடித்தது. அஜித்தின் குழு வெற்றியாளரை காட்டிலும் மூன்று லேப்கள் பின்தங்கிய நிலையில் பந்தயத்தை நிறைவு செய்தது. இதன் மூலம் இந்த சுற்றில் ஒட்டுமொத்தமாக 38-வது இடம் பிடித்தது அஜித் குழு. இதே தொடரில் அஜித் குழு சார்பில் எல்.எம்.பி3 கேட்டகிரியில் ஆதித்யா படேல் மற்றும் நரேன் கார்த்திகேயன் பங்கேற்றுள்ளனர்.

