Friday, August 7, 2026 6:11 am
மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றைக் கொண்ட ரஷ்ய நகரமான யாரோஸ்லாவ்ல் மீது உக்ரைனின் ட்ரோன்கள் நடத்தியதாக்குதலால் பெரும் கருப்புப் புகை மேகங்கள் சூழ்ந்துள்ளன.
“எதிரியின் ஆளில்லா விமானங்களால் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்” என்று பிராந்திய ஆளுநர் தெரிவித்தார். 92 ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும், சிதறல்கள் காரணமாக மூன்று வீடுகளில் தீப்பிடித்ததாகவும் கூறுகிறார்.
ரஷ்யா முழுவதும், யாரோஸ்லாவ்ல் உட்பட பல பிராந்தியங்களில் 605 உக்ரேனிய ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்துள்ளதாக இராணுவம் கூறுகிறது.
சமீபத்திய வாரங்களில், சுத்திகரிப்பு நிலையங்கள் , கிடங்குகள் உள்ளிட்ட ரஷ்ய உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
உக்ரைனில், குடியிருப்புப் பகுதியில் நடந்த ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

