Monday, July 20, 2026 10:39 am
மாத்தறை , வெல்லமடம பகுதியில் டிஃபெண்டர் ரக வாகனமும் , காரும் , சிமெண்ட் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிஃபெண்டர் வாகனத்தில் பயணித்த நால்வர் மற்றும் சிமெண்ட் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரும் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தோரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளரால் தெரிய வந்துள்ளது.
குறித்த டிஃபெண்டர் வாகனமும் காரும் மாத்தறையிலிருந்து தங்கல்லையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது , தங்கல்லையிலிருந்து மாத்தறை நோக்கி வந்த சிமெண்ட் லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் மேலதிக விசாரணைகளின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

