Friday, July 17, 2026 4:33 pm
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்களினால் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக 13வது வாரமாக அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலி. வடக்கு பலாலி மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் தமது 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

