Friday, July 17, 2026 1:58 pm
டித்வா புயலின்போது சேதமடைந்த தமது வீதியை புனரமைத்து தருமாறு வலியுறுத்தி கொத்மலை வேவண்டன் தோட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது தமது பகுதியில் உள்ள பாடசாலையையும் சீரமைக்குமாறு குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொத்மலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வேவண்டன் தோட்டத்தில் சுமார் 48 குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் டித்வா புயலின்போது இத்தோட்டத்திற்கான பிரதான பாதை முழுமையாகச் சேதமடைந்துள்ளது. தமக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கொத்மலை பிரதேச செயலகம் உறுதியளித்த போதிலும் 9 மாதங்கள் கடந்தும் இதுவரை எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை எனக் கூறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

