Friday, July 17, 2026 1:53 pm
கொழும்பு கொடகம – பொரளை பிரதான வீதியில் அத்துருகிரிய கோவின்ன மாவத்தை அருகே இன்று இடம்பெற்ற பஸ் டிப்பர் மோதிய விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றதாகவும் விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஒருவல மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி வாகனத்திற்குள் சிக்கிய நிலையில் அவரை மீட்புப் படையினர் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக முன்னெடுத்த மீட்பு நடவடிக்கையின் பின்னர் பாதுகாப்பாக வெளியேற்றி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

