Saturday, July 4, 2026 9:38 pm
நியூயார்க் நகரில் நடைபெற்ற நேதன்ஸ் ஃபேமஸ் சிற்றுண்டி உண்ணும் போட்டியின் பெண்கள் பிரிவில், மிக்கி சூடோ 10 நிமிடங்களில் 38 3/4 சிற்றுண்டி, பன்களை விழுங்கி வெற்றி பெற்றுள்ளார். இது சூடோவின் 12வது சம்பியன்ஷிப் வெற்றியாகும்.
இவர் கடந்த ஆண்டும் 33 சிற்றுண்டி ,பன்களைச் சாப்பிட்டு இந்தப் பரிசை வென்றார். சூடோ தனது 51 சிற்றுண்டி என்ற சாதனையை முறியடிக்கவில்லை.
சனிக்கிழமை காலை, பெரிதும் விரும்பப்படும் மஸ்டர்ட் பெல்ட் , 10,000 டொலர் ரொக்கப் பரிசுக்காகப் பத்து பெண்கள் போட்டியிட்டனர். 2021-ல் இந்தப் பட்டத்தை வென்ற மிஷெல் லெஸ்கோ இரண்டாம் இடத்தைப் பிடித்தார். போட்டியின் போது 22 சிற்றுண்டி, பன்களை மட்டுமே சாப்பிட்ட லெஸ்கோ, சூடோவை விட மிகவும் பின்தங்கினார்.

