Friday, July 3, 2026 2:37 pm
தவெக தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் மக்கள் கூடினர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் வரை உயிரிழந்தனர். இது தவெகவுக்கு கரும்புள்ளியாக அமைந்தது. இதற்கு பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக தவெக நம்புகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில், மாற்று கட்சியினர் தவெகவில் இணையும் விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூர் சம்பவத்திற்கு திமுகவை குற்றம்சாட்டி பேசியிருக்கிறார்.
உதயநிதியின் வாழ்க்கைக்காக பொலிஸை வைத்துக்கொண்டு எங்களை மக்களை கொன்று குவித்தீர்களே ஸ்டாலின் சார். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததில் என்ன நடந்தது என்று எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நன்றாக தெரியும். கரூரில் திட்டமிட்ட சூழ்ச்சியை உருவாக்கி கூட்ட நெரிசலை ஏற்படுத்தி மக்களை கொன்றுவிட்டனர். கரூர் தவெக மாவட்ட செயலாளரை செந்தில் பாலாஜி திட்டமிட்டு சிறையில் அடைத்தார்’ என்று அவர் பேசியிருக்கிறார்.
போலீஸ் மூலம் கரூர் மக்களை திமுக கொன்றதாக அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு அமைச்சர் இப்படி பேசக்கூடாது. பொலிஸார் மீது இப்படி புகார் சொல்லக்கூடாது என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

