Friday, July 3, 2026 1:54 pm
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு கடற்படை அதிகார உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாதிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு பிரித்தானிய கடற்படை அகடமியில் பயிற்சிக்கு அனுப்பியமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஆணைக்குழுவுக்கு வசந்த கரன்னாகொட இன்று அழைப்பட்டிருந்தார். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

