Monday, June 22, 2026 12:01 pm
மட்டக்களப்பு நகரில் பிரபலமான உணவகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடியவரை 5 மணிநேரத்திற்குள் பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த உணவகத்தில் கடமையாற்றும் முகாமையாளர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் புதிதாக கொள்வனவு செய்த மோட்டார் சைக்கிளை சம்பவ தினமான நேற்று முன்தினம் உணவகத்தின் முன்னால் உள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு கடமையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மதியம் சென்று பார்த்த போது, மோட்டார் சைக்கிள் திருட்டு போயுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து , சிசிடிவி காணொளியை அடிப்படையாகக் கொண்டு விரைந்து செயற்பட்ட பொலிஸார் , சந்தேகநபரை 5 மணிநேரத்திற்குள் கைது செய்துள்ளனர். கைதானவர் ஏற்கனவே பல மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கரவண்டிகள் என்பனவற்றை திருடி வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

