Tuesday, June 16, 2026 8:54 pm
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை,நேரில் சந்தித்துப் பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்த முக்கிய நிகழ்வின் போது, பாஜ தேசிய செயலாளரும், தமிழக பாஜவின் மேலிடப் பொறுப்பாளருமான அரவிந்த் மேனனும் உடனிருந்தார்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 12 ஆண்டுகால மக்கள் நல ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்களை ரஜினிகாந்திற்கு அவர்கள் வழங்கினர்.

