Tuesday, June 16, 2026 2:07 pm
தென்னம் பொச்சு மட்டைகளுக்குள் மறைத்து மணல் கடத்திய வாகன சாரதி சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பளை பகுதியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியே சாவகச்சேரி பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிக்கு தென்னம் பொச்சு மட்டைகளை ஏற்றி செல்வது போன்று அனுமதி பத்திரமின்றி மணலை குறித்த நபர் நீண்ட காலமாக கடத்தி வந்துள்ளார்.
சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வாகனத்தை வழிமறித்து சோதனை செய்த போது பொச்சு மட்டைகளுக்குள் மணலை கடத்தி சென்றமை கண்டறியப்பட்டு வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் சாரதி மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

