Monday, June 15, 2026 10:55 am
இராணுவமயப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க கோரி யாழில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் உள்ள இராணுவ மயப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் இன்று திங்கட்கிழமை (15) யாழ் மாவட்ட செயலகம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணி உரிமைகளுக்காக போராடும் மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைந்து கொண்டனர்.
இதேவேளை பலாலி பகுதியிலும் காணி விடுவிப்பை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

