Thursday, June 11, 2026 3:48 am
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் வாகனம் நிறுத்தத் தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனம் நிறுத்திய சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் முன் வீதியில் உள்ள வாகனங்கள் நிறுத்தத் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் வாகனங்களை நிறுத்திய சாரதிகளுக்கே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியினால் பெருமளவான வாகனங்கள் செல்வதாலும் இவ்வாறு தடைசெய்யப்பட்ட பகுதியில் வாகனங்களை நிறுத்துவதனால் வைத்தியசாலைக்கு வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்வதனாலும் பருத்தித்துறை போக்குவரத்து பொலிஸாரால் குறித்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது சுமார் 20 சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.


