Saturday, June 6, 2026 10:28 pm
48 அணிகள்
1248 வீரர்கள்
357வீரர்கள் முன்னர் விளையாடியவர்கள்
7 வீரர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்
43 வயது கிரேக் கார்டன் மூத்த வீரர்
17 வயது கில்பெர்டோ மோரா இளையவீரர்
6 ஆவது உலகக்கிண்ணத்தில் 3 வீரர்கள்
4 நாடுகளுக்கு முதல் உலகக்கிண்ணப் போட்டி
அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிக்கான இறுதி அணிப் பட்டியல்களை பீபா புதன்கிழமை வெளியிட்டது.
48 அணிகளிலும் சேர்த்து மொத்தம் 1248 வீரர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 357 பேர் இதற்கு முன்னர் உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள்.
உலகக் கிண்ணத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட ஏழு வீரர்கள் பங்கேற்பார்கள்.
43 வயதான ஸ்காட்லாந்து கோல்கீப்பர் கிரேக் கார்டன், இந்த முறை பங்கேற்கும் வீரர்களில் மிகவும் வயதானவராக இருப்பார். 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியின்போது 45 வயதாக இருந்த எகிப்திய கோல்கீப்பர் எஸாம் எல் ஹடாரிக்குப் பிறகு, உலகக் கிண்ணத்தில் விளையாடும் இரண்டாவது வயதான வீரரும் இவரே ஆவார்.
போர்த்துகல் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமான 41 வயதான கிறிஸ்டியானோ இரண்டாவது இடத்தில் உள்ளார். 2026-ஆம் ஆண்டில் நடைபெறும் உலகக்கிண்ணப் போட்டியில் ரொனால்டோ விளையாடினால் மூத்த வீரராக இருப்பார்.
2026 உலகக் கிண்ணத்தில் விளையாடும் மூத்த வீரர்கள்
• கிரேக் கார்டன் (ஸ்கொட்லாந்து) – 43 ஆண்டுகள், 5 மாதங்கள் ,3 நாட்கள்
• கிறிஸ்டியானோ ரொனால்டோ (போத்துகல்) – 41 வயது, 3 மாதம், மற்றும் 29 நாட்கள்
• கில்லர்மோ ஓச்சோவா (மெக்ஸிகோ) – 40 ஆண்டுகள், 10 மாதங்கள் ,21 நாட்கள்
• லூகா மோட்ரிச் (குரோஷியா) – 40 ஆண்டுகள், 8 மாதங்கள் , 25 நாட்கள்
• எடின் ஜெக்கோ (போஸ்னியா & ஹெர்சகோவினா) – 40 ஆண்டுகள், 2 மாதங்கள் , 17 நாட்கள்
• மானுவல் நியூயர் (ஜேர்மனி) – 40 ஆண்டுகள், 2 மாதங்கள் ,7 நாட்கள்
• வோசின்ஹா (கேப் வெர்டே) – 40 ஆண்டுகள், 0 மாதங்கள்,, 0 நாட்கள்
ஆர்ஜென்ரீனாவின் லியோனல் மெஸ்ஸி, போத்துகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ , மெக்ஸிகோவின் கில்லர்மோ ஓச்சோவா ஆகியோர் தங்களது ஆறாவது உலகக் கோப்பைப் பயணத்தில் பங்கேற்கவுள்ளனர். அதே சமயம், கேப் வெர்டே, குராசோ, ஜோர்தான் ,உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகள் தங்களது முதல் உலகக் கோப்பையில் விளையாடவுள்ளன.
சுமார் 891 வீரர்கள் முதல் முறையாக இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இது உலகளாவிய விளையாட்டில் தொடர்ச்சியையும் புதுப்பித்தலையும் எடுத்துக்காட்டுகிறது,” என்று பீபா கூறியது.
ஸ்கொட்லாந்து கோல்கீப்பர் கிரேக் கார்டன் 43 வயது , 162 நாட்களில் இந்தத் தொடரில் பங்கேற்கும் மூத்த வீரராக இருப்பார், அதே நேரத்தில் மெக்சிகோவின் கில்பெர்டோ மோரா 17 வயது , 240 நாட்களில் இளைய வீரராக இருப்பார். தொடரின் தொடக்கத்தில் 20 வயதுக்குட்பட்ட 22 வீரர்களும், 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஏழு வீரர்களும் இருப்பார்கள்.

