Friday, May 29, 2026 2:59 pm
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குடன் தொடர்புடைய முன்கூட்டிய மாநாடு இன்று (29) நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து , இந்த வழக்கை ஜூலை மாதம் 07ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்துவதற்காக நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

